இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
நம்பிக்கை இருந்தாலும் அடிக்கடி அந்தநினைப்பு
மாறாமலிருக்க விபூதி, திருமண்காப்பு, மாலைகள்,
ஐந்தெழுத்து எட்டெழுத்து ஜெபம்
முதலியன அவசியம். இவைகளே பெருங் கோட்டைகளாக
அமைதியரசனைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும்.
நான்காவதாக அமைதியடைந்து இறைவன் தாளில் இன்பமார்ந்திருக்கும் குரு- அடியார்கள் இவர்களிடம் அன்பாயிரு. இதுவும் நீ அடைந்த அமைதியைப் பாதுகாத்தற்குத் தக்கவழியாகும். மற்ற நேரங்களிலே அமைதிப் பொக்கிஷங்களாகிய திருமுறைத் திவ்யப்பிரபந்த ஆராய்ச்சிகளும் சாஸ்திர ஆராய்ச்சியும் செய்வது மனத்திற்கு ஊக்கமருந்து ஊட்டியது போலத் தளர்ச்சியைத் தள்ளிக்கொண்டிருக்கும்.
எல்லாவற்றையும்விட ஒன்றில் கவனமாயிரு. நீ அடைந்த அநுபவத்தைப் பெரிதென்று எண்ணாதே. அப்படி எண்ணுவது பிறருடைய அநுபவத்தை அவ