பக்கம்:அமைதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

மதிக்கச்செய்யும். அவமதிப்பு அமைதிக்குப் பங்கம். பிறசமயங்களை வெறுத்தல் பெரிய அழிவுக்குக் காரணம். அது வேண்டவே வேண்டாம். ஆனால் உன்சமயத்தில் - சமயசாதனங்களில் பற்றுக் குறையாதே. அதில் அழுத்தம்வேண்டும் என்றுபதேசித்தார்.

அதனைக் கேட்ட அளவிலேயே அமைதியை அடைந்தான்; அதற்காக நெடுநாள் அலைந்து ஆராய்ந்து வந்தவன். அவனுக்கு அனுபவம் ஏற ஏற அமைதி வேர்கொண்டு நிலைபெறுவதாயிற்று. மலை நிலைகுலையினும் அவன் குலைவதில்லை. கடல் குழம்பினும் அவன் குழம்புவதில்லை. தெளிவும் அமைதியும் சேர்ந்த தெய்வக் காட்சியில் திகழ்ந்து வருகிறான்.

அன்பர்களே! நாமும் அமைதித் தெய்வத்தின் மடியில் அருமைக் குழந்தையாக வளரவேண்டுமானால் அதற்கான வழிகளை அநுபவத்தில் உணரவேண்டும். உணர்ச்சி உயர்வளிக்கும். அதுவே அமைதி. அதுவே ஆனந்தமான அமரவாழ்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/25&oldid=1771626" இலிருந்து மீள்விக்கப்பட்டது