இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ
குருபாதம்
அமைதி.
நமக்கெல்லாம் மனம்ஒருநிலையில் இருப்பதில்லை. இன்றைக்கு நாவற்பழத்தை நாடுகிறது. நாளைக்கு நாரத்தம்பழத்தை நாடுகிறது. நாடிப் பெற்ற உடனாவது நல்லமகிழ்ச்சி யிருக்கிறதா? பெறுவதற்கு முன்னிருந்த ஆர்வம் பெற்ற பிறகு இருப்பதில்லை. பெற்ற பிறகு வெறுப்புக்கூட உண்டாகிவிடுகிறது. கைக்குக் கிடைத்த பலாப்பழம் கசக்கிறது. கிடைக்காத களாக்காய் இனிக்கிறது. இப்படியாக நம்மனம் ஒன்றை விட்டு ஒன்றுபற்றி அலைந்துகொண்டே யிருக்கிறது. இந்த நிலையை அநுபவவாயிலாக அறிந்த ஞானியொருவர்க்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. மனத்தைப் பார்த்து அழைக்கிறார்: பட்டம் சூட்டி. “மனமெனும் மூடக் குரங்குப்பயலே” என்று.