இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
இப்படி அலைகின்ற மனத்திற்கு அமைதியுண்டா? அமைதியில்லாத இடத்தில் ஆனந்தம் விளையுமா? அலை கின்றகடல் கலங்கிக்கொண்டே இருக்கிறது. அலையாத கடலிடத்துத் தெளிவு இருக்கிறது. ஆழமிருக்றது. அதுபோல அலையாத மனத்திற்கும்.
உழைத்தவனுக்கு ஓய்வு உணவு. பேசிக் கொண்டே இருப்பவனுக்கு மௌனம் மருந்து. படித்துக் களைத்தவனுக்கு விளையாட்டு விருந்து. அதுபோல அலைகின்ற மனத்திற்கு அமைதி அளவிலா ஆனந்தம்.
அமைதி எங்கே யிருக்கிறது:
இது இருக்கிற இடம் கண்டுபிடிப்பது தான் அருமை. இந்த அமைதிக்கண்டம் அமெரிக்காகண்டத்தைக் கண்டுபிடித்தகொலம்பசுக்காவது தெரியமா? அமைதியொளி மின்னொளிகண்ட எடிஸனுக்காவது