பக்கம்:அமைதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


தெரியுமா? அமைதி நுணுக்கத்தைக் கணக்கு நுணுக்கத்தைக்கண்ட நியூத்தனாவது அறிவாரா?

அமைதி யிருப்பிடம் ஆராய்ந்த ஒருவன்:

வேளா வேளைக்கு ஒருவயிற்றுச் சோற்றுக்குப் பலர் கையைப் பார்த்திருக்கும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த பரம்பரைத் தரித்திரன் ஒருவன் இருந்தான். அவனைச்சுற்றி எங்கும் சஞ்சலம். சோறு சஞ்சலம். துணி சஞ்சலம். ஒண்ட இடம்: உட்காரத் திண்ணை: நடக்குந்தெரு எல்லாம் சஞ்சலம். அவனுடைய ஒழியாச் சஞ்சலம் தனக்கும் ஒரு ஓய்வை நாடிற்று. அமைதியை ஆராயச் செய்தது. அதனால் அமைதித் தெய்வத்தைத் தேடிப் புறப்பட்டான். விடா உழைப்பை மேற்கொண்டான். தீராப் பஞ்சம் போராய் மூண்டு பெரும்பொருளைக் குவிக்கிறதல்லவா? இளைத்த உடல் பருக்கிறதல்லவா? அது போல இவனுக்கும் உலைவு ஊக்கமாகிறது. அமைதி எங்கே? அமைதியைத் தெரிவிக்கும் ஆசாரியன் யார்? என்று தேடிப்புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/7&oldid=1771591" இலிருந்து மீள்விக்கப்பட்டது