பக்கம்:அமைதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


அப்போது அவ்வூரரசன் எடுபிடிகளும் கெடுபிடிகளும் சூழ, ஆடம்பரமாக ஆனைமீது அம்பாரிவைத்து அதன்மேல் ஏறிக்கொண்டு பவனி வருகிறான். அவன் முகத்தே புன்முறுவல் தவழ்கின்றது. வருவார் போவார், வணங்குவார் எழுவார், வழங்குவார் வாங்குவார் இவர்களைக் கண்டதும் அரசன் ‘நமது கையையல்லவா எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்’ என்று எண்ணுகிறான். உடனே புன்முறுவல் முகமலர்ச்சியாகிறது. இதனைக் கண்டதும் அமைதியைத் தேடி வந்த வறியவன் மனம், இங்கல்லவா அமைதியிருக்கிறது; என்ன மகிழ்ச்சி! என்னமகிழ்ச்சி! என்று எண்ணுகிறது. அரசனுடைய அமைதி அவன் உடுத்திய ஆடையிலிருக்கிறது. அணியிலிருக்கிறது. ஆனையிலிருக்கிறது. சேனையிலிருக்கிறது. அரண்மனையிலிருக்கிறது. அந்தப்புரத்திலிருக்கிறது. எல்லா அமைதியுஞ் சேர்ந்து இவன் நெஞ்சிலிருக்கிறது. நெஞ்சில் நிறைந்து முகத்தில் வழிகிறது. ஆதலால் அரசனையடைந்தால் நாம்சிறிது அமைதி கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/8&oldid=1771593" இலிருந்து மீள்விக்கப்பட்டது