பக்கம்:அமைதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


கொள்ளலாம் என்று எண்ணினான். பின் தொடர்ந்து சென்றான். பவனி அரண்மனை வாயிலில் முடிந்தது. அரசன் கீழே இறங்கி அரண்மனைக்குள் நுழைந்தான். அமைதிகற்க வந்த சீடன் கூடப்புகமுடியுமா? இவனுடைய இடுப்பில் சரிகை வேட்டி யில்லையே. கந்தைத் துணிதானே தோரணங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தொந்தி பருத்தில்லையே. பலநாள் பட்டினியால் ஒட்டிக் கிடக்கிறதே! ஆதலால் வாயில்காவலாளிகள் வைது ஒதுக்கிவிட்டனர். வந்த வறியவன் அமைதி கற்கும் பள்ளிக்கூடத்திலுமா நாம்புக முடியாது என்று எண்ணி ஏமாந்து நின்றான்.

நண்பகல் வந்தது. வெயில் வெப்பம். காவலாளி கண்ணயர்ந்தான். அவன் சோம்பல் இவனை உள்ளேயனுப்பிவிட்டது. ஒண்டி ஒண்டி உட்காவலையும் எப்படியோ தாண்டி, அரசனுடைய அந்தப்புரச் சோலையை யடைந்துவிட்டான். அப்போது மாலை நேரம். ‘எப்படியாவது உள்ளே போய் அரசனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/9&oldid=1771594" இலிருந்து மீள்விக்கப்பட்டது