பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 - சுந்தர சண்முகனார்

நாக்கு; எனவே, நாக்கால் உயிர் உண்டாய் என்று கூறியிருப்பது பொருத்தம். குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரை நாணும்படி நாவால் வைதுவிட்டால், வையப்பட்டவர், மானம் தாளாது, நஞ்சு அருந்தியோ தூக்குப் போட்டுக் கொண்டோ தற்கொலை செய்து கொள்ளும் உலகியல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

பிரித்த பந்தர்

இராமனது முடிசூட்டு விழாவிற்காக முத்துப் பந்தர் போடப்பட்டதுபோல் இரவில் வானில் விண்மீன்கள் பளிச்சு- பளிச்சு என மின்னிக்கொண்டிருந்தன. பொழுது புலர்ந்ததும், முத்துப் பந்தரைப் பிரித்ததுபோல் விண் மீன்கள் கண்கட்குப் புலப்படாமல் மறைந்தன.

வரித்த தண்கதிர் முத்த தாகி இம்மண் அனைத்தும் நிழற்றமேல்
விரித்த பந்தர் பிரித்த தாம்என மீன் ஒளித்தது வானமே

(54)

என்பது பாடல் பகுதி. வானில் இரவில் உள்ளது போலவே பகலிலும் விண்மீன்கள் உள்ளன. ஆனால், ஞாயிற்றொளி மிக்கதாய் இருப்பதால் விண்மீன்கள் பகலில் தெரியவில்லை. இதைக் கம்பர், வானம் விண் மீன்களை ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறது என்னும்மிகவும் நயமான பொருளில் 'மீன் ஒளித்தது வானமே" எனக் கூறியுள்ளார். இதே பாடலின் முதல் அடியில், 'சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமனை' என, இராமனின் கண்ணுக்குச் சிரித்த பங்கயம் ஒப்புமையாக்கப் பட்டுள்ளது. மலர்ந்த தாமரை என்னும் பொருளில் 'சிரித்த பங்கயம் என- பங்கயம் சிரிப்பதாகக் கூறியிருப்பது புதியதொரு சுவையாகும்.

நஞ்சினை இடுவார்

இராமனுக்கு முடி சூட்டு விழா நடக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியால், ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மடந்தையர், காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு