பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 103

யான் வாழு நாளும் பண்ணன் வாழிய (173)

என்று கூறி வாழ்த்தியுள்ளான். 'கல்வியில் பெரியராகிய கம்பர், இந்தப் புறநானூற்றுப் பாடலைப் படித்து இருக்கலாமோ!

புகழ் தழுவல்

மேலும் பெரியோர்கள் இராமனை வாழ்த்திப் புகழ் கின்றனர்:- கடலைத் தோண்டி உண்டாக்கிய சகரர் புகழும், கங்கையை நிலத்திற்குக் கொண்டு வந்த பகீரதன் புகழும், தேவர்களைக் காப்பதற்காக அரக்கர்களைக் கொன்று வென்ற முசுகுந்தன் முதலியோரின் புகழும் இராமனது புகழுக்குப் பிற்பட்டனவேயாம்- எனப் புகழ்கின்றனர்:

ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர், முந்தைப்
போர்கெழு புலவர்க் காகி அசுரரைப் பொருது வென்றோர்,
பேர்கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன்
தார்கெழு திரள் தோள் தந்த புகழினைத் தழுவி என்பார்

(96)

ஆர்கலி = கடல். புலவர் = தேவர். சகரர் என்பார் கடலைத் தோண்டி உண்டாக்கியதால்தான் கடலுக்குச் ‘சாகரம்' என்ற பெயர் உண்டாயிற்று. பகீரதனால் நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதால் கங்கை பாகீரதி' என்னும் பெயர் பெற்றது. முசுகுந்தன், ககுத்தன் முதலியோர் அசுரரை வென்று தேவரைக் காத்தனர். இவர்கள் அனைவரும், இராமனது ஞாயிறு குலத்தவர் இராமன் குடியின் முன்னோர்கள். ககுத்தனது குடிவழி வந்ததால் இராமன் 'காகுத்தன்' எனப்படுகிறான்.

இவர்களின் புகழ்கள் இராமனது புகழுக்கு அடுத்தபடியான சிறப்புடையனவே யாம். இராமனுக்குப் புகழ் எப்படி வந்தது? இளமையிலேயே தன் தோள் வலிமையால் மறச் செயல்கள் புரிந்துள்ளான். அவை:- யாராலும் நகர்த்தவும் முடியாத வில்லை ஒடித்தமை; தங்கள் குல