பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 - சுந்தர சண்முகனார்

னால் பேசும் சொல் சுடும் எனவும், ஆறாது' என- அச் சொல்லால் சுட்ட புண் ஆறாது எனவும் கூறியுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

(129)

என்பது குறள். தீப் புண் ஆறிவிடுமாம், நாப் புண் ஆறாதாம்.

குகப் படலம்

கண் ஈர்கிலாக் கள்வன்

இராமனை விட்டுப் பிரிய குகனுக்கு மனம் இல்லை. ஐயனே, உங்களை இந்தக் கோலத்தில் கண்ட கண்களைத் தோண்டி எடுக்காத திருட்டு மனம் உடையவன் யான் எனக் கூறுகிறான்.

பார்குலாம் செல்வ! நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்......

(17)

குகன் கூறுவது, ஒரு புது முறைத் திருட்டாக உள்ளது. நீக்கவேண்டிய கண்களைக் கள்ளத்தனமாக வைத்துக் கொண்டிருக்கிறானாம்.

துன்பமும் இன்பமும்

பிரிய மனம் இல்லாத குகனை நோக்கி இராமன் ஆறுதல் கூறுகிறான். அன்பனே! இன்பத்திற்கு இடை யிடையே துன்பம் வரும்போதுதான் இன்பத்தின் அருமை தெரிகிறது. இப்போது நாம் பி ரியாமல் இங்கே உள்ளேம். இது உனக்கு இன்பமாய்த் தோன்றலாம். நான் இவ்விடத்தைப் பிரியின் உனக்குத் துன்பம் ஏற்படும். நான் மீண்டும் வந்து உன்னைக் காணுங்கால் அந்த இன்பம் மிகவும் சுவையாய் இருக்கும். அதனால்