பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 8. குகப் படலம்: கங்கைக் கரையில் குகன் வந்து இராமனையும் மற்றவரையும் கங்கையைக் கடக்கச் செய்து தன்னுடனேயே இருக்குமாறு வேண்டிக் கொள்ளுதல், இராமன் குகனிடம் உறவு பாராட்டி ஆறுதல் கூறி மேற் செல்லுதல் ஆகியவை பற்றியது.

9. மூவரும் காட்டிற்குள் சென்று முனிவர்களின் விருந்தோம்பலை வழியெல்லாம் பெற்று சித்திர கூடம் நோக்கிச் செல்லுதல் பற்றியது வனம் புகு படலம்.

10. சித்திர கூடப் படலம்: காட்டில் சித்திர கூடம் என்னும் இடத்தில் குடில் அமைத்துக் கொண்டு மூவரும் தங்கியிருத்தலைப் பற்றியது.

11. பள்ளி படைப் படலம்: பரதன் கேகய நாட்டி லிருந்து அயோத்திக்கு வந்து நடந்தன யாவும் அறிதல்தந்தையின் இறப்புக்கும் தமையனின் பிரிவுக்கும் வருந்துதல்- தாயைக் கண்டித்தல்- தயரதன் உடலை ஈமப் படுக்கையில் (பள்ளியில்) வைத்து எரியூட்டுதல்பத்து நாட்கள் ஈமக் கடன்கள் (இறுதிச் சடங்குகள்) நடத்துதல்- ஆகியவை பற்றியது. இறந்தவரின் நினைவு கூடத்திற்குப் பள்ளி என்னும் பெயர் உண்டு.

12. ஆறு செல் படலம்: பரதன் தான் முடிசூடிக் கொள்வதற்கு உடன்படாமல், இராமனை அழைத்து வரக் காடு நோக்கி உறவினருடனும் படைகளுடனும் வழி கடத்தல் பற்றியது.

13. கங்கை காண் படலம்: பரதன் தன்னுடன் வந்தவர்களோடு கங்கைக் கரையை அடைதல்- குகனது