பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 சுந்தர சண்முகனார்

'பள்ளி படைப் படலம்'

கொடியின் கானம்

கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த பரதன் நகரில், காடுபோல் அடர்ந்து பறந்து கொண்டிருக்கும் கொடிகளைக் காணவில்லையாம். இங்கே வானளாவிய கொடிகள், ஞாயிறை நோக்கி, நீ உலகமெல்லாம் திரிந்து சோர்வுற்றிருக்கிறாய்! அதனால் இவண் தங்கி உணவு கொண்டு சோர்வு தெளிந்து செல்வாய் எனக் கூறுதல் போல் ஞாயிறைத் தடுக்குமாம். அத்தகைய காட்சியைப் பரதன் பார்க்கவில்லை. இராமன் நீங்கியதால் கொடிகள் பறக்கவில்லை.

அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்ததால், அமுது உண்டு போதி என்று ஒண்கதிர்ச் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடுங் கானமே

(30)


கொடிகள் மிகுந்து உயரமாக இருப்பதாலும் நெடுகிலும் கட்டப்பட்டு இருப்பதாலும், ஞாயிறைத் தொடர்ந்து, சென்று தடுக்க முடிந்ததாம்.

ஏன் சென்றாய்?

தந்தையை எண்ணிப் பரதன் புலம்புகின்றான்: தந்தையே! உன்னிடம் பலரும் வந்து பலவித உதவி வேண்டி இரப்பர்; எனவே, இல்லாதவர்கள் வானுலகத்திலும் உளரோ? அவர்கட்கு உதவுவதற்காக அங்கே சென்று விட்டாயோ? நினது குடை நிழலில் குளிர்ச்சியாய் வாழ்ந்த உயிர்கள் வெந்து வாடிக் கொண்டிருக்க, நீ கற்பகமர நிழலைக் காதலித்து விண் சென்றனையோ? முன்பு உன்னால் வெல்லப்பட்ட சம்மரன் போன்ற அரக்கர்கள் இன்னும் உளரோ? அவர்களை அழித்துத்