பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 - சுந்தர சண்முகனார்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

(236)

என்னும் குறள் கருத்தை நினைவுறுத்துகின்றது அல்லவா?

கங்கை காண் படலம்

மேல் ஏறினான்

உலகத்தை யாண்ட மற்ற மன்னர்களையெல்லாம் (பண்பினால்) கீழ்ப்படுத்தி, அவர்களினும் பண்பினால் மேலே உயர்ந்தவனாகிய பரதன், தன்னுடன் வந்தவர்கள் எல்லாரும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தபின், தானும் படகில் ஏறினான்:

சுழித்து நீர்வரு துறை ஆற்றைச் சூழ்படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான்

(63)

உலகில் மன்னர்கள் பெரும்பாலார் தாம் அரசாள வேண்டும் என்றே விரும்பினர்; அதற்காகப் பங்காளி அரசர்களுடனோ- உடன் பிறந்தவர்களுடனோ போட்டி போட்டும் போர் புரிந்தும் ஆட்சியைப் பிடித்தவர் பலர். கள்ள ஆசையினால், தந்தையையோ- உடன் பிறந்தவர் களையோ- சிறையில் இட்டோ- அல்லது கொன்றோ அரசு கட்டில் ஏறியவரும் உண்டு. இந்தக் காலத்திலும், ஆட்சித் தலைமையைக் கைப்பற்றப் பலர் செய்யும் சூழ்ச்சிகளை உலகம் அறியும். உலகியல் இங்ஙனம் இருக்க, எளிதில் கிடைத்த ஆட்சியைப் பரதன் ஏற்கவில்லை எனில், அவன் எல்லாரினும் மேல் ஏறியவன் தானே!

மற்றும், தானும் ஏறினான்' என்ற தொடரிலும் ஒரு சுவை காத்திருக்கிறது. தலைவர்கள் சிலர் உண்ணும்