பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. கம்பனின் சொல் ஆட்சிக் கலை


க்க இடத்தில் தக்க சொல்லைப் பெய்து பேசுவதும் எழுதுவதும் ஒருவிதக் கலையாகும். பேச்சினும், என்றும் நிலைத்திருக்கும் எழுத்து வடிவத்திற்கு இந்தக் கலை மிகவும் இன்றியமையாததாகும்.

பேச்சு நடையும் எழுத்து நடையும் காலப் போக்கில் மாறுவதுண்டு. மாறுதலுக்கு மிகுந்த இடம் தந்தால், முற்கால நடை ஒரு மொழி போலவும் பிற்கால நடை மற்றொரு மொழி போலவும் தோன்றக் கூடும். அதனால் மாறுதலிலும் ஓரளவு கட்டுப்பாடு வேண்டும்.

எழுத்தால் ஆனது சொல்- சொல்லால் ஆனது சொற்றொடர் (வாக்கியம்)-என்ற அடிப்படையில் ஆய்வது 'காரண காரிய முறை' (Logic Method) ஆகும். முதலில் சொற்றொடர்- பின் சொல்- பின் எழுத்து என்ற முறையில் ஆய்வது உளவியல் முறை' (Psychological Method) ஆகும்.

மனிதன் முதலில் சொற்றொடராகத்தான் பேசினான்- பின்பே சொற்றொடரிலிருந்து சொல் பிரிக்கப் பட்டது- அதற்குப்பின் சொல்லிலிருந்து எழுத்து பிரிக்கப் பட்டது. தனி எழுத்துக்கோ- தனிச் சொல்லுக்கோ பொருள் இலை. ஒரெழுத்து ஒரு மொழியாயினும் தனிச் சொல்லாயினும் ஒரு சொற்றொடரில் வைத்துப்