பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

 தொடர்பு- கங்கையைக் கடத்தல்- ஆகிய வை பற்றியது. - 14. திருவடி சூட்டு படலம்: பரதன் இராமனை நெருங்குதல்- இலக்குவன் சினத்தல்- முடிசூடிக் கொள்ளுமாறு இராமனைப் பரதன் அழைத்தல் இராமன் உடன்படாமை- பரதன் இராமனின் திருவடியை (பாதுகையை- மிதியடியை) வேண்டிப் பெற்றுத் தன் முடிமேல் சூடிக் கொண்டு அயோத்திக்கு மீளுதல்- ஆகியவை பற்றியது.

வேறுபாடுகள்

கம்பராமாயணத்தில் சில படலங்கட்கு வேறு பெயர்கள் தரல், ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தின் இறுதியில் அமைத்திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் அடுத்த படலத்தின் தொடக்கத்தில் அமைத்தல், ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தின் தொடக்கத்தில் அமைத்திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் முன் படலத்தின் இறுதியில் அமைத்தல், பாடல்களிலே சில தொடர்களும் சில சொற்களும் பதிப்புக்குப் பதிப்பு வேறுபட்டிருத்தல், பாடல்களின் எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வு உள்ளமை, சில பதிப்புகளில் இல்லாத பாடல்கள் வேறு பதிப்புகளுள் உள்ளமை முதலிய பல வேறுபாடுகள் கம்ப ராமாயணப் பதிப்பு களில் உள்ளன. அயோத்தியா காண்டமும் இதற்கு விதி விலக்கு அன்று.

கம்ப ராமாயணம் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உடைமையால், இடத்திற்கு இடம்- ஆளுக்கு