பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 - சுந்தர சண்முகனார்

மாற்றாளின் பணிப் பெண்கட்கு நான் பணி செய்ய இயலாது என்று கூறினாள்.

மாதுயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன என்றாள்

(62)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, மாற்றாந்தாய்' என்னும் உலக வழக்குச் சொல்லாட்சி ஒப்பு நோக்கத் தக்கது.

'

நகர் நீங்கு படலம்'

இன்றிய, ஓட்டந்து

இருகண்களும் இல்லாத தாய் தந்தை என்பதற்கு, 'இரு கண்களும் இன்றிய தாய் தந்தை (77) என்று கம்பர் எழுதியுள்ளார். இன்றிய' என்பதற்கு இல்லாத என்பது பொருள். ஒடி என்பதற்கு ஒட்டந்து' என்று கூறியுள்ளார்- யானை என்று கருதித் தான் கொன்று விட்ட இளைஞனின் உடலைச் சுமந்து கொண்டு அவனுடைய பொற்றோர்களிடம் தயரதன் ஒடினானாம். பாடல் பகுதி:

வீட்டுண்டு அலறும் குரலால் வேழக் குரல் அன்றெனவே
ஓட்டங்து எதிரா, நீ யார் என, உற்ற எலாம் உரையா...

(81)

'அ' உருபு

ஆறாம் வேற்றுமை உருபு 'அது' எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்- வேற்றுமையியல்:

.................................ஆறாகுவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (18)

என்பது நூற்பா. நன்னூலார் அது, ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமை உருபு என்று கூறி, உடைமைப் பொருள் ஒருமையாயிருந்தால் அது, ஆது உருபுகளும்,