பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 129

கங்கை காண் படலம்

வில்லின் கல்வியான்

குகன் வில் பயிற்சிக் கல்வியில் வல்லவனாம். வில் பயிற்சியாகிய படைப் பயிற்சியும் ஒருவகைக் கல்வியாகும். படைப் பயிற்சிக் கல்லூரி இப்போது இராணுவக் கல்லூரி எனப்படுகிறது. எனவேதான்,

மெய்உறு தானையான் வில்லின் கல்வியான் (8)

என்று குகனைக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கங்கை வேடனாகிய குகனைப் போலவே, காளத்தி வேடனாகிய கண்ணப்பனும் படைப் பயிற்சிக் கலை முதலியவற்றில் இளம் பருவத்திலேயே வல்லவனாயிருந்தான். இதனால், சுந்தரர் தமது தேவாரம்- திருத் தொண்டத் தொகை- என்னும் பகுதியில்,

கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்

என்று கண்ணப்பனைக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

குறி

சுமந்திரன் பரதனுக்குக் குகனைப் பற்றி அறிமுகம் செய்கையில், அவன் குகன் என்னும் 'குறி உடையான் எனக் கூறினான். 'குறி' என்பது, ஈண்டு ஒருவகை அடையாளமாகிய பெயரைக் குறிக்கிறது.

கொங்கலரும் நறுந்தண் தார்க்கு குகன் என்னும் குறி உடையான் (25)

என்பது பாடல் பகுதி. குறி என்னும் சொல்லாட்சி சுவை பயக்கிறது

பூவில் பூட்டிய கையன்

குகன் பரதனின் காலில் விழுந்து கையால் காலைக் கட்டிக்கொண்டு வணக்கம் செய்தானாம். பரதனின் அ. ஆ.-9