பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 - சுந்தர சண்முகனார்

மேலும் கூனி :- பரதன் ஏழுநாள் பயணம் செய்து அடையக் கூடிய நெடுந்தொலைவில் உள்ள கேகய நாடு சென்றுள்ளான். இங்கே இராமனுக்கு நாளைக்கு முடிசூட்டு என்கின்றனர். இதைப் பரதனுக்கும் அறிவிக்க வேண்டுமல்லவா? அவனும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமல்லவா? அவனுக்கு ஆள் அனுப்பினால், ஆள் போக ஏழு நாளாகும்; உடனே பரதன் புறப்படினும் அவன் வந்து சேர ஏழு நாள் ஆகும். பதினான்கு நாள்கள் கடந்த பின்னரே பரதனைக் காண முடியும். நிலைமை இவ்வாறிருக்க, இராமனுக்கு விரைந்து விரைந்து நாளைக்கு முடிசூட்டப் போகின்றார்களாம்- என்பதை உள்ளத்தில் கொண்டு கூனி கூறுகிறாள். நற்பேறு இல்லாத பரதனை, நெடுந்தொலைவில் உள்ள கேகய நாட்டிற்கு அரசன் ஆணையால் அனுப்பியதில் உள்ள சூழ்ச்சி இப்போதுதான் புரிகிறது- என்கிறாள்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னைப் பண்டு ஆக்கிய பொலங் கழல் அரசன் ஆணையால் தேக்குயர் கல்லதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்

(67)


என் மகள் கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குப் பட்டம் சூட்டுவதென்றால், கைகேயியை உனக்கு மணம் முடித்துத் தருவேன் எனக் கேகயன் கேட்டபோது, அவ்வாறே செய்வதாகத் தயரதன் கூறியதாக ஒரு செய்தி உள்ளதால், பரதன் இங்கே இருப்பின் அவனுக்கு முடிசூட்ட வேண்டும் என வற்புறுத்தப் பட்டாலும் படலாம் என எண்ணிப் பரதனை நெடுந்தொலைவு அனுப்பிவிட்டதாகக் கூனி எண்ணிக் கூறியிருக்கிறாள்.

தயரதன் சூழ்ச்சியா?

பதினான்கு நாள் சென்றால்தான் பரதனைக் காண முடியும் என்ற நிலைமை இருக்க, இராமனுக்கே நாளைக்கே பட்டம் சூட்டுவதாகத் தயரதன் தெரிவித்த