பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ) சுந்தர சண்முகனார்

மருத்துவச் சித்தர்கள் சூட்டியுள்ளனர். இது ஒரு சொல் விளையாட்டாகும். தசரதனைத் தயரதன் என்பது போல் கைகேயி என்று கூறுவதல்லாமல் கைகேசி என்றும் கூறலாம். ஈண்டு சகரமும் யகரமும் ஒத்து ஒலிக்கின்றன.

விதியின் பிழை

பரதன்மேல் சினங்கொண்டு போர் தொடுக்கத் துடித்த இலக்குமணனுக்கு இராமன் கூறுகிறான். ஆற்றில் தண்ணீர் இல்லாவிடின் அது அவ்வாற்றின் பிழை ஆகாது. அது போலவே, இப்போது நிகழ்ந்துள்ளது யார் பிழையாலும் அன்று. அதாவது:- மன்னன் பிழையும் அன்று நம்மை வளர்த்த தாயாகிய கைகேயியின் பிழையும் அன்று- அவள் மகனான பரதன் பிழையும் அன்று- இது விதியின் பிழை- எனவே, இதற்காக நாம் வெகுளலாகாது- என்கிறான்.

உலகியலில், எதையாவது இழந்து வருந்துபவர்கட்கு, இது விதியின் பிழை- இது நடந்தே தீரும்- எனவே வருந்தலாகாது என விதியின் தலைமேல் பழியைப் போட்டு ஆறுதல் கொள்ளச் செய்வது வழக்கம். அந்த உள்வழியை (உபாயத்தை) இராமனும் இங்கே பின்பற்றியுள்ளான்.

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்சொல் வெகுண்டது என்றான்

(129)

தன் குற்றம்

தயரதன் குற்றமும் இல்லை, கைகேயியின் குற்றமும் இல்லை, பரதனது குற்றமும் இல்லை, விதியின் பிழைஎன்று ஒரு போக்குக் காட்டிய இராமன், இது தன் குற்றம்