பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 145

என்று கூறியிருப்பது, உயர் பண்பாட்டின் பேரெல்லை யாகும்!

முன் கொற்ற மன்னன் முடிகொள்க எனக் கொள்ள முண்டது
என் குற்றம் அன்றோ இகல் மன்னன் குற்றம் யாதோ

(128)

தந்தை தயரதன் முடிசூடிக்கொள் என்றதும், நீங்கள் இருக்கும்போது நான் முடிசூடிக் கொள்வது ததாது என்று கூறித் தடுக்காதது என் குற்றம் அல்லவா- என்று கூறினான் இராமன்.

கதம் தீர்வது

மேலும் இராமன் இலக்குமணனுக்குச் சொல்கிறான்: தம்பி! உன் கதம் (சினம்) தீரவேண்டுமெனில், உன் அண்ணன் பரதனைப் போர் செய்து தொலைக்க வேண்டுமா? தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் தட்டிக் கழித்து வெல்ல வேண்டுமா?- என்கிறான்:

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இவ்வைய மையல் தோன்றா நெறிவாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ
ஈன்றாளை வென்றோ இனி இக்கதம் தீர்வது என்றான்

(134).

முன்னம் முடி

இலக்குமணனைப் பெற்ற சுமித்திரை, இராமனுடன் காடேக உள்ள இலக்குமணனிடம் நயமாகக் கூறிய உரை சிறந்த அறிவுரையாகும். இலக்குமணா! காடுதான் உனக்கு அயோத்தி, இராமன் தான் தயரத மன்னன். சீதையே உனக்குத் தாய். இனிக் காலம் தாழ்க்காதே! அவர்களுடன் காடு செல்வாயாக. மேலும் சொல்கிறேன்: நீ இராமனிடம் தம்பி என்ற உறவு முறையில் நடந்து கொள்ளலாகாது; அடியவன் (தொண்டன்) என்ற முறை யில் இட்ட ஏவலைச் செய்ய வேண்டும். இராமன் அயோத்திக்குத் திரும்ப முடியும் எனில் அவனுடன் நீயும் அ. ஆ.-10