பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 149


'

திருவடி சூட்டு படலம்'

யான் தந்தனென்

இராமன் பரதனை நோக்கி, தாய் தந்தையர் ஆணைப்படி அரசு நின்னதே! நீ ஆள்க- என்று கூறிய இராமனிடம் பரதன் கூறுகிறான். ஐயனே- சரி- அரசு எனதேயாகுக! யான் உனக்கு என் அரசைத் தருகிறேன் நீயே ஆள்க. ஏனெனில், இந்த உலகம் மூன்றிலும் உனக்கு ஒப்பு நீயே. மற்றும் என்னிலும் மூத்துளாய்; எனவே ஏற்றருள்க- என்கிறான்:

முன்னர் வந்து உதித்து உலகம் முன்றினும்
நின்னை ஒப்பிலா நீ பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா

(112)

இன்றொடு ஏறுமோ

பரதனே! நீ அரசை என்னிடம் அளித்தல் முறை யாகாது. யான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் தங்குவதாக அரசர் ஆணைப்படி ஏற்றுக் கொண்டுள்ளேன். அதன் பின்னரே யான் அரசு ஏற்கமுடியும். நீயோ இன்றே ஆட்சியை ஏற்கச் சொல்கிறாய். இன்று ஒரு நாள் பதினான்கு ஆண்டுகள் ஆகுமோ?- ஒரு நாள் கழிந்தால் பதினான்கு ஆண்டுகள் கழிந்ததாகுமோ?

பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டெலாம் இன்றொடு ஏறுமோ

(114)

மேலும் இராமன் மொழிகிறான் பரதனுக்கு-பெரியவராகிய நம் தந்தை மன்னவர் இருக்கும்போதே எனக்கு அரசைத் தந்தார். நான் அதை முதலில் ஏற்றுக் கொண்டது எதற்காக எனில், பெரியவர் சொல்வதை