பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. கற்பனை நயங்கள்

ழகக் காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களில் கற்பனை மிகுதியாயிருக்கும். கம்பராமாயணம் போன்ற வரலாற்றுத் தொடர்புடைய இலக்கியங்களில் கற்பனை கட்டாயம் இருக்கும். கற்பனை இன்றெனில் அவை இலக்கியங்களாக மதிக்கப் பெறாமல் வரலாற்று நூலாகவே மதிக்கப் பெறும். வரலாற்று நூலாசிரியன் சிறிதும் கற்பனை இல்லாமலும் தன் கருத்தை வலிந்து புகுத்தாமலும் வரலாற்றை அமைக்க வேண்டும்; இல்லையேல்- அதாவது, கற்பனையும் சொந்தக் கருத்தும் புகுமேல் அவை இலக்கியங்களாகக் கருதப்படும். எனவே, வரலாற்றுத் தொடர்புடைய இலக்கியமாகிய கம்ப ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள முத்தான சில கற்பனை நயங்களைக் காண்பாம்:

கைகேயி சூழ்வினைப் படலம்

தென்றலின் திருவிளையாடல்!

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. தென்றல் காற்று மலர்களின் இதழ்களை விரித்து உண்டாக்கிய நறுமணத்துடன் பெண்கள்மேல் வீசுகிறது. அவர்களின் உடை காற்றால் கலைகிறது. தென்றல் உண்டாக்கிய