பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 சுந்தர சண்முகனார்



பண்ணெனும் சொல்லினார்தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண்ணெனும் காலவேலும் மிடைநெடுங் கானம் புக்கான்

(88)

வேல் என்பது வேல் படை; வேல் என்பது வேல மரத்தையும் குறிக்கும். காட்டில் வேல மரங்களும் இருக்கும்; அந்தக் கருத்தையும் உள்ளடக்கினாற்போல் வேல் என்னும் சொல் இரட்டுற மொழிதலாக அமைக்கப் பட்டுள்ளது.

நகர் நீங்கு படலம்

கண் கலுழி ஆறு

பெண்கள் மார்பில் குங்குமச் சாந்தும் சந்தனச் சான்றும் பூசியுள்ளனர்; முத்து மாலையும் அணிந் துள்ளனர். முலைகள் மேடாக உள்ளன. இடுப்பில் மேகலை அணிந்துள்ளனர். இராமன் காடு ஏகப் போகிறான் என்பதை அறிந்ததும் கண்கலங்கி அழுதனர். கண்ணீர் மார்பிலுள்ள முலைகள், சாந்துகள் ஆகியவற்றின் வழியாக வழிந்து மேகலைத் தடத்தை அடைகிறது. இதனைக் கம்பர் உருவகப்படுத்திக் கற்பனை செய்துள்ளார்:

திடருடைக் குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஒரீஇ மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த கண் கலுழி ஆறரோ

(178)

கண்ணீராகிய ஆறு, குங்குமச் சேற்றையும் சந்தனக் குழம்பையும் திட்டு- திட்டாக ஆக்கியும், சில பகுதிகளை வண்டல்போல் ஒதுக்கியும் முத்துகளை அடித்துக் கொண்டும் முலைகளாகிய மலைப் பகுதியினின்றும் கீழிறங்கி மேகலைத் தடமாகிய கடலை அடைந்ததாம். ஆறுகளில் வெள்ளம் வரும்போது இவ்வாறு நிகழ்வ