பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 169


விளக்கியும் சென்றான்: ஏந்திய இள முலையாளே-எழுத வொண்ணா அழகியே! இதோ, காந்தளின் அரும்பினைப் பாம்பு என்று எண்ணி மயில் கவ்வியதைப் பார்த்து, முல்லை மலர்கள் புன்முறுவல் பூப்பதைக் –

ஏந்திள முலையாளே எழுத அரு எழிலாளே காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னிக் கவ்வியபடி பாரா
தேந் தளவுகள் செய்யும் சிறு குறுநகை காணாய்

(9)

காந்தள் = ஒரு மலர்; மஞ்ஞை = மயில்; பாந்தளி = பாம்பு; கவ்வியபடி= கவ்விய தோற்றம்; பா ரா = பார்த்து- இது செய்யா' என்னும் வாய்பாட்டு வினை யெச்சம்; தளவுகள்= முல்லைகள். காந்தளின் அரும்பு பாம்புபோல் தோற்றமளிக்கும். அதைப் பாம்பு என்று ஒரு மயில் தவறாக எண்ணிக் கவ்வுகிறது. பாம்பின் பகை மயில் அல்லவா? இதைக் கண்டு முல்லைகள் புன்னகை புரிகின்றனவாம்- அதாவது, மயிலின் தவறான- ஏமாற்றமான செயலைக் கண்டு முல்லைகள் புன்னகை பூத்தல் என்பது ஒரு கற்பனை. சிரிக்கும் பல்லுக்கு முல்லையை ஒப்புமையாகக் கூறுதல் இலக்கிய மரபு. முல்லைகளின் தோற்றம் இயற்கையாகச் சிரிப்பது போல் உள்ளது. இதை, மயிலின் ஏமாற்றத்தைக் கண்டு தான் சிரிக்கின்றன என்று கம்பர் கற்பனை செய்துள்ளார்.

இந்தப் பகுதியில், பல பாடல்களில், இராமர் சீதை. யின் மார்பகங்களைப் புனைந்து இத்தகைய மார்பகங்களை உடையவளே- என விளிப்பதாகக் கம்பர் கூறியுள்ளமை படிப்பதற்கு என்னவோபோல்தான் உள்ளது. இது ஒர் இலக்கிய மரபு என்று கூறுவதோடு அமையாமல், மேலும் இதுபற்றி ஒன்று கூறவேண்டும். சிற்பங்களிலும் ஒவியங்களிலும் பெண்களின் மார்பகங்கள் பெரியனவாக அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல்,