பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. புராண வரலாற்றுக் குறிப்புகள்


ந்தப் பகுதியில் புராண வரலாறுகள் சிலவற்றைக் காண்போம்:

கைகேயி சூழ்வினைப் படலம்

அரிந்தான்

கைகேயி வரம் கேட்டதும் சோர்வுற்ற தயரதனிடம் அவள் கூறுகிறாள்: உண்மையை- உயர் பண்பைக் காக்கச் 'சிபி' என்னும் ஞாயிறு குலமன்னன் ஒரு புறாவிற்காகத் துலைத் தட்டில் ஏறித் தன் தசையை அரிந்த வரலாறு உனக்குத் தெரியாதா? எனவே, சொன்ன சொல்லை நீ மறுக்கலாமா?

அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அருமேனி
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான்...
(47)

நாரணன் ஒக்கும்

தயரதன் அழைத்ததனால் தனது மாளிகையிலிருந்து தேர் ஏறித் தெரு வழியே சென்ற இராமனைக் கண்டு பலர் பலவாறு பேசிக் கொண்டனர்: கஜேந்திரன் என்னும் யானையின் காலை முதலை பற்றி இழுத்தபோது, அந்த யானை 'ஆதி மூலமே' என்று கூவி அலறியபோது உடனே