பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 சுந்தர சண்முகனார்


தாயை வெட்டியவன்

மழுப்படை ஏந்திய பரசுராமன், தன் தாய் இரேணுகையிடம் குறைகண்டதால் அவளை வெட்டி விடுமாறு தன் தந்தை யம தக்கினி கட்டளையிட, மறுக்காமல் அவ்வாறே தன் தாய் இரேணுகையின் தலையை வெட்டி விட்டானாம்:

மான்மறிக் கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல்; தாயையே
ஊன் அறக் குறைத்தான்...

(25)

மேரு மத்து

அமிழ்தம் எடுப்பதற்காகப் பால்கடல் நடுவே மந்தர மலையை மத்தாக இட்டு வாசுகி என்னும் பாம்பைக் கடை கயிறாகப் பயன்படுத்தி, தேவர்கள் ஒரு புறமும் அரக்கர்கள் மறுபுறமுமாக நின்று கடலைக் கடைந்தனர். அப்போது கடல் திரிந்ததுபோல் இலக்குவன் திரிந்தானாம்:

மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றது போல் திரிகின்ற வேலை

(119)

கூனியால் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு கொதித்துத் திரிந்தானாம் இலக்குவன்.

முற்றா மதியம்

சந்திரனின் மனைவிமார்கள் எனப்படும் அசுவணி பரணி முதலிய இருபத்தேழு விண்மீன்களும் தக்கனின் பெண்களாம். சந்திரன் அவர்களிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாமையால் தக்கன் சினந்து, சந்திரனை நோக்கி, நீ ஒவ்வொரு கலையாய் அழிந்து போவாயாக என்று கெடுமொழி (சாபம்) இட்டானாம். அதனால், சந்திரனின் பதினாறு கலைகளுள் ஒவ்வொன்றாய்ப் பதினைந்து கலைகள் அழிந்தனவாம். ஒரு கலை மட்டும் இருக்கும்