பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 183


உடம்போடு வீடு (முத்தி) பெற்ற சீவன்முத்தர் போல் களிப்போடு காணப்பட்டனராம்:

இறைவன் சொல்எனும் இன்நறவு அருந்தினர் யாரும் முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்

(74)

தயரதன் சொன்ன சொல் நறவு (மது) என உருவகிக்கப் பட்டுள்ளது. அவையினர்க்குச் சீவன்முத்தர் உவமையாக்கப்பட்டுள்ளனர். உடலோடும் விண்ணகம் எய்துதல், உலக வழக்கில் "கூண்டோடு கைலாசம் போதல்' எனக் குறிப்பிடப்படுவதுண்டு.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

புள் புகல்

இராமன் முடிசூட்டிற்காக நகரம் அணி செய்யப்படு கிறது. வெள்ளை, கறுப்பு, சிவப்பு முதலிய பல வண்ணக் கொடிகள் விண்ணில் பறந்து கொண்டிருந்த காட்சி, பல வண்ணப் பறவைகள் விழாகாண நகருக்குள் புகுந்து பறப்பதுபோல் இருந்ததாம்.

வெள்ளிய கரியன செய்ய வேறுள
கொள்ளை வான்கொடி நிரைக் குழாங்கள் தோன்றுவ,
கள்ளவிழ் கோதையான் செல்வம் காணிய புள்ளெலாம் திருநகர் புகுந்த போன்றவே

(37)

மாறிய உவமைகள்

நகர் அயோத்தி அணி செய்யப்பட்டது. பெண்களின் துடைகள் போன்ற வாழை மரங்கள் கட்டப்பட்டன. அவர்களின் கழுத்து போன்ற கமுகுகள் (பாக்குமரம்) அமைக்கப்பட்டன. அவர்களின் பல்வரிசைகள் போன்ற