பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 19

'யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னைஎன்று உலவாக் கட்டுரை பல பாராட்டி!'' (73–81)

என்பதுதான் அந்தப் பாராட்டு. இரண்டாம் காதையின் இறுதியில் இவ்வாறு அமைத்தது, (45 அடிக்) கண்ணகியை, அடுத்த காதையாகிய அரங்கேற்று காதையிலேயே கோவலன் பிரியும்படிச் செய்து காட்டியுள்ளார் இளங்கோ. இது ஒரு வகையான காப்பிய முன்னோடிச் சுவை. இந்த மனையறம் படுத்த காதையின் இறுதியில் ஒரு தனி வெண்பா உள்ளது. இது முற்றிலும் முன்னோட்டப் பாடலாகும். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று உடலைப் பின்னி முறுக்கிக்கொண்டு இன்பம் துய்ப்பது போலவும், மன்மதனும் இரதியும் கலந்து இன்புறுவது போலவும் கோவலனும் கண்ணகியும் இரண்டற ஒன்றிக் கலந்து இன்பம் துய்த்தனராம். இந்த உலக இன்பம் நிலையில்லாதது; எனவே, நாம் இருக்கும் போதே எவ்வளவு மிகுதியாக இன்பம் துய்க்க முடியுமோ- அவ்வளவும் துய்த்துவிட வேண்டும் என்று எண்ணிச் செய்தவர் போலக் காணப்பட்டனராம்.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தாலென ஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து- நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று

என்பது பாடல். பணிகள் = பாம்புகள். காமர்-மனைவி= மன்மதனும் அவன் மனைவி இரதியும். நிலையாமை கண்டவர் போல்' என்பது உண்மையில் பலித்து விட்டதே. காமத்துறைக்குப் பொறுப்பாளனாகச் சொல்லப்படும் மன்மதனைக் குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்.

மற்றொன்று:- கண்ணகியையும் கவுந்தியடிகளையும் மதுரைப் புறத்தே தங்கச் செய்து கோவலன் மதுரை