பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 191


வேல் போன்ற படைகளால் தாக்கப்படாமலும் மக்களால் இறந்துவிட்டானே. நண்டு, நாகம், கனிவாழை, மூங்கில் ஆகியவைதாம் கருவுயிர்க்கும் பிள்ளைகளால் இறப்பதுபோல்- அழிவது போல் அல்லவா இருக்கிறது இது- என்று புலம்புகிறாள்:

நோயும் இன்றி நோன்கதிர் வாள் வேல் இவை இன்றி
மாயும் தன்மை மக்களின் ஆக, மறமன்னன்
காயும் புள்ளிக் கற்கடகம் நாகம் கனிவாழை வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள்

(18)

கற்கடகம்=நண்டு; வேய் = மூங்கில். மற்றும் இங்கே,

நண்டு சிப்பி வேய் கதவி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவுயிர்க்கும் கொள்கைபோல்... (36)

என்னும் ஒளவையின் நல்வழிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. நண்டின் முதுகைப் பிளந்து கொண்டு குஞ்சுகள் வெளிவருமாம்; பின்னர் நண்டு இறந்து விடுமாம். உள்ளே இருக்கும் முத்தை எடுக்கச் சிப்பியைப் பிளப்பதால் சிப்பி அழிகிறது. பெரும்பாலான மூங்கில் இனங்கள் ஆண்டுகள் பல வாழ்ந்திருந்து ஒரே முறை பூத்துப் பின்பு சிறிது காலத்திற்குள் பட்டுப் போகுமாம். குலை ஈன்றதும் தாய் வாழை மரம் வெட்டப்படும் அதனால்தான் கம்பர் "கனி வாழை' என்றார்.

கம்பர் சிப்பியைக் கூறவில்லை; நாகத்தைக் கூறி யுள்ளார். நாகப் பாம்பு தன்னிடம் உண்டான மாணிக்கம் நீங்கினால் இறந்துவிடும் என்பதாகச் சொல்லப்படுகிறது.

நீலகேசி என்னும் காப்பியத்தின் உரையில் பின்வரும் பாடல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது:

புத்தன்தாய் நண்டிப்பி வாழை புனமுங்கில்
கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி- இத்தனையும்