பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 - சுந்தர சண்முகனார்


பட்டுள்ளன. இப்பாடலில் கம்பர் சொற்சிலம்பம் ஆடியுள்ளார். கடல் என்னும் பொருளைக் குறிக்கும் பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் நான்கு சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.

அறிஞர் போல

பரதனுடன் கொண்டு செல்லப்படும் தாரை, சங்கு முதலிய இடங்கள் எல்லாம், அறிவிலார் கூட்டத்தில் அறிஞர் பேசாமல் அடங்கியிருப்பதுபோல் சிறிதும் ஒலி எழுப்பவில்லை.

தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு வார்மிசைப் பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற, பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே

(33)

மதி இலாக் கங்குல்

பரதனுடன் வெண் கொற்றக் குடை இல்லாமல் செல்லும் படை, விண்ணில் விண் மீன்கள் இருப்பினும் வெள்ளிய திங்கள் இல்லாத இரவைப் போன்றிருந்ததாம்:

அதிர்கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதிவரும் தனிக்குடை மீது இலாப் படை,
பொதிபல கவிகை மீன் பூத்த தாகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே

(35)

மறி கடல் ஒத்தது

இராமன் சென்றபின் பரதனும் அறிஞர், இளைஞர் முதலியோருடனும் திருவுடனும், பலவகைப் படை களுடனும் இராமனை அழைத்துவரக் காட்டிற்குச் சென்று விட்டதால், வறிய அயோத்தி, அகத்தியர் நீர் முழுவதையும் குடித்துவிட்ட காலிக் கடல் போல் காட்சியளித்ததாம்.