பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 - சுந்தர சண்முகனார்


எல்லாம் ஓரிடத்தில் அழைப்பதுபோல் தன் படை மறவர் அனைவரையும் அழைக்கிறான்:

எலி எலாம் இப்படை, அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்;
வலி உலாம் உலகினில் வாழும் வள்ளுகிர்ப்
புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே

(10)

ஆ முன் கூழ்

ஏழு கடல்கள் போன்ற பெரிய படை எனினும் இப்படை என்முன், ஆவின் முன் வைத்த சிறு கூழ்போல் ஆகிவிடும் என்று குகன் கூறுகிறான்:

ஏ முனை உற்றிடில் ஏழு கடற்படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ்என இப்பொழு தாகாதோ

(23)

உன் புகழ்

பரதனது உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட குகன் பரதனைப் புகழ்கின்றான்: ஞாயிறு மற்ற ஒளிகளை யெல்லாம் அடக்கி விடுதல்போல், உன் புகழ், உன் முன்னோர் புகழ்களை எல்லாம் அடக்கித் தன் புகழாக்கிக் கொண்டது- என்றான்.

என் புகழ் கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க் குமாபோல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத்து உரவுத்தோளாய்

(36)

திருவடி சூட்டு படலம்

விளக்கு அவிதல்

தயரதன் இறந்தான் என்பதைக் கேட்டுப் புலம்பிய இராமனை வசிட்டன் தேற்றுகிறான்: புண்ணியம்