பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 199


என்னும் நெய் ஊற்றி, (ஆயுள்) காலம் என்னும் திரி இட்டுப் பற்றச் செய்த விதி என்னும் எரியும் விளக்கு, மற்றவை இரண்டும் தீர்ந்துவிடின் அவியும் அல்லவா?

புண்ணிய நறுநெயில், பொரு இல் காலமாம் திண்ணிய திரியினில், விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு, அவை இரண்டும் எஞ்சினால் அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ?

(75)

புண்ணியம் நெய்யாகவும் காலம் திரியாகவும் விதி தீயாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. தயரதன் புண்ணியம் செய்து முடித்து விட்டான்; அவனது அகவையும் (ஆயுள் காலமும்) முடிந்தது; அவனது விதி இம்மட்டோடு நின்று விட்டது. எனவே, அவன் இறந்ததற்காக வருந்த வேண்டியதில்லை- என்பது கருத்து.

இவ்வாறு பல்வேறு முத்து முத்தான உவமைஉருவகங்களை அமைத்துக் கம்பர் காப்பியத்தைச் சுவைக்கச் செய்துள்ளார். உவமைகளின் வாயிலாகச் சில அரிய கருத்துகளை விளங்க வைத்துள்ளார்.