பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. சில சுவையான முத்துகள்

துகாறும், குறிப்பிட்ட தனித் தனித் தலைப்புகள் தொடர்பான பாடல்களைப் பார்த்தோம். இந்தப் பகுதி யில், இதுவரையும் பார்க்காத பொதுவான சுவை முத்துகள் சிலவற்றைக் காண்பாம்:

நகர் நீங்கு படலம்

தமியன் சென்றான்

வெண் சாமரையோடும் வெண்குற்றக் குடையோடும் இன்ன பிற அரசச் சிறப்புகளோடும் இராமன் முடிசூடிய கோலத்துடன் வருவான்- கண்டு மகிழலாம் என எண்ணமிட்டுக் கொண்டிருந்த கோசலை, முடியிழந்த இராமன் காடு செல்லும் பயணத்தை அறிவிக்க வந்த கோலத்தைக் கண்டு திகைத்து விட்டாள்:

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக் குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன்ஒரு தமியன் சென்றான்
(1)

கவரியும் குடையும் இன்றி இயங்கும் இராமனை முன்னால் விதி இழுத்துக் கொண்டு செல்கின்றதாம். அறம், செய்வதறியாமல் அவன் பின்னால் தொடர்ந்து