பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 219

மரவுரி உடுத்திருக்கிறான்- உடம்பு முழுதும் அழுக்கு, படிந்துள்ளது- கலையிழந்த திங்களைப் போல் முகத்தில் நகைப்பொலிவு இல்லை- கல்லும் கனியும்படித் துன்பத்தால் கனிந்து கசங்கியுள்ளான்- என்றெல்லாம் குகன் எண்ணியபோது, அவனை அறியாமலேயே வில் அவன் கையிலிருந்து கீழே விழுந்து விட்டது. மிகவும் விம்மி விம்மிச் சோர்ந்தான்.

மேலும் குகன் கூறுகின்றான். பரதன் இராமனைப் போன்றுள்ளான்; அவன் பக்கத்தில் உள்ளவன் (சத்துருக்கனன்) இராமனுடன் சென்ற தம்பி இலக்குவனை ஒத்துள்ளான்; பரதன் தவக் கோலம் தாங்கியுள்ளான்; அவனது துன்பத்திற்கு அளவில்லை போலும் இராமன் சென்ற திசையை நோக்கித் தொழுகிறான். ஆகா! இராமன் பின் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா? (மாட்டார்களே)- என்று கூறுகிறான்:

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நற்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையி னின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்

(29)

(கற்கனிய = கல் கனிய; விற்கை = வில்கை)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவில்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்

(30)

இரக்கம் உண்டாக்கும் ஒலி இப்பாடல்களில் அமைந்துள்ளது.

ஆயிரம் இராமர் !

குகன் பரதனை வணங்கிப் புகழ்கிறான்: தாய் கைகேயியின் உரைப்படி தந்தை தந்த அரசைத் தீயதாகக் கருதித் துறந்து, உயர் எண்ணம் கொண்டு, இராமனை