பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 221


ரொம்ப அழகாயிருக்குதப்பா' என்று கூறி இடுப்பை ஒடிப்பது போல், பரதன் 'என் அடிமை அழகாயிருக்கிறது’ என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். இந்தப் பாடலில் இராமனுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பரதன் வாயிலாக 'முடிவு இலாத துன்பம்’ எனக் கம்பர் பாடியுள்ளார். இது பொருள் பொதிந்த தொடராகும். இராமனுக்கு இதுவரையும் வந்த துன்பங்களைவிட இனிமேல் வரப்போகும் துன்பங்கள் பலவாகும். சீதையை இழந்தது, இலங்கை சென்று போர் புரிந்து சீதையை மீட்டது- முதலியன பெரிய துன்பங்கள் அல்லவா? இம்மட்டோடு இராமனின் துன்பங்கட்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. அயோத்திக்குச் சென்று முடிசூடிக் கொண்ட பின்பும் சீதையைக் காட்டிற்கு அனுப்பி விட்டானல்லவா? பரதனுக்குப் பட்டம் என்றதனால் இராமன் காட்டிற்கு வந்தான்- காட்டில் இருந்ததால் இராவணன் சீதையை எடுத்துச் சென்றான் - இராவணனது இலங்கையில் இருந்ததால், அயோத்தியில் சீதைக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டது-அதனால் இராமன் சீதையைக் காட்டிற்கு அனுப்பி விட்டான்- ஆகிய இவற்றையெல்லாம் உள்ளடக்கி 'முடிவு இலாத துன்பம்' எனக் கம்பர் கூறியிருக்கும் புலமை சுவைக்கத் தக்க தன்றோ? பரதன் பண்பும் சுவைக்கத் தக்கது.

குகனுக்கு அறிமுகம்

சுற்றத்தார் தேவரோடு தொழுகின்ற கோசலையைக் குறிப்பிட்டு இவர் யார் என்று குகன் வினவ, பரதன் அறிமுகம் செய்கிறான். இவர் தயரதனின் முதல் தேவிமுதல் மகனாகிய இராமனைப் பெற்றதால் அடைய இருந்த பெரிய அரசச் செல்வத்தை, யான் பிறந்ததால் இழந்துவிட்ட பெரிய அம்மையார்- என்றான்.

சுற்றத்தார் தேவரொடும் தொழகின்ற
கோசலையைத் தொழுது நோக்கிக்
கொற்றத்தார்க் குரிசில் இவர் ஆர்என்று
குகன் வினவக் கோக்கள் வைகும்