பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 - சுந்தர சண்முகனார்


முற்றத்தான் முதல் தேவி, மூன்றுலகும்
ஈன்றானை முன் ஈன்றானை
பெற்றத்தால் பெறுஞ் செல்வம் யான்
பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான்

(64)

கோக்கள் - அரசர்கள். முற்றம்= வாயில். கோக்கள் வைகும் முற்றத்தான் = அரசர் பலர் காண்பதற்காக வாயிலில் வரிசையில் நிற்கும் பெருமைக்கு உரிய தயரதன். (இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?- மணிக் கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது). மூன்றுலகும் ஈந்தானை முன் ஈன்றானை = மூன்றுலகையும் ஈன்ற திருமால் முதல் மகனாக ஆன இராமன்.

குரிசில்

குகன் கோசலையின் கால்களில் அழுது கொண்டு விழ, அவனைக் குறிப்பிட்டு இவன் யார் என்று அவள் வினவப் பரதன் குகனை அறிமுகப்படுத்துகிறான்: இவன் இராமனின் துணைவன்- எனக்கும் (பரதனுக்கும்) இலக்குவனுக்கும் இளைய தம்பி சந்துருக்கனனுக்கும் மூத்தவன் (தமையன்)- குகன் என்னும் பெயர் உடைய குரிசில்- என்று பரதன் தெரிவித்தான்:

என்றலுமே அடியின்மிசை நெடிது வீழ்ந்து
அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய
கொடி வினவக் கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவர்க்கும்
இளையவற்கும் எனக்கும் முத்தான்;
குன்றனைய திருநெடுந்தோள் குகன் என்பான்
இங்கின்ற குரிசில் என்றான்

(65)

கன்றைப் பிரிந்த காராவைப் போல் இராமனைப் பிரிந்த கோசலை துவள்கிறாள். பரதன், இராமன் தவிர்த்த மற்ற மூவர்க்கும் குகன் மூத்த தமையன் என்று