பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 - சுந்தர சண்முகனார்

முடிசூட்டிற்காக அடையும் உவகையின் அளவினைச் சொல்ல இயலாது:

தாய் கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை கிளர்ஞாலம் இவன் ஆள ஈகையில் உவந்தவள் இயற்கை இது என்றால் தோகையவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்

(101)

வளர்த்த கைகேயி மிகவும் மகிழ்வாள் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இந்தப் பாடலில் உள்ள வளர்த்தது கேகயன் மடந்தை' என்னும் தொடரின் தொடர்பாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. வானொலியில் செய்தி வாசிப்பவர், வாசிப்பது இன்னார், என்று தம் பெயரைச் சொல்லிச் செய்தியைத் தொடங்குகிறார். இது குறித்துப் பலரிடையே 'தடை விடை நடைபெற்றது. வாசிப்பது இன்னார்' என்று சொல்வது தவறு: 'வாசிப்பவர் இன்னார்' என்று சொல்வதே பொருத்தம் என்பது சிலரது கொள்கை. சிலர், வாசிப்பது இன்னார்' என்று கூறுவதில் தவறு இல்லை என்று கூறினர். எது பொருத்தமானது என்பதை அறியக் கம்பரிடம் சென்று கேட்டுப் பார்ப்போம்: 'வளர்த்தவள் கேகயன் மடந்தை' என்று கூறாமல் வளர்த்தது கேகயன் மடந்தை' என்றே கம்பர் கூறியுள்ளார். எனவே, இந்த இரண்டினுள் எவ்வாறு கூறினும் பொருத்தமே என்ற தீர்ப்பு கம்பரால் நமக்குக் கிடைத்துள்ளது.

இடர் தருவாய்

உடன் வருவேன் என்று மன்றாடிய சீதைக்கு இராமன் சொல்கிறான். நீ உடன்வரின், எல்லையில்லாத் துன்பம் வரும். இதை நீ உணரவில்லை என்றான்: ....................... விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை ஆதலின் எல்லை யற்ற இடர் தருவாய் என்றான்(ந. நீ.ப-227)