பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. உலகியல் உண்மை முத்துகள்


ல்வியில் பெரியவராகிய கம்பர், ஏட்டுக் கல்வி யோடு நின்று விடாமல், உலகியல் உண்மைகளை நிரம்ப அறிந்துள்ளார். உலகில் மக்களின் ஒழுகலாறு உள்ள நிலைமையை அப்படியே ஓவியப்படுத்திக் காட்டியுள்ளார். அயோத்தியா காண்டத்தில் அவர் கையாண்டுள்ள இந்தக் கலைக் கூறு அமைந்துள்ள முத்தான சில இடங்களைக் காணலாம்:—

மந்திரப் படலம்

உள்ளம் நோக்கியோ?

உலகில் பெருஞ் செல்வரையோ, பெரிய பதவியாள ரையோ சிலர் 'காக்கா’ பிடிப்பதாகச் சொல்லும் வழக்காறு ஒன்று உண்டு. அந்தப் பெரியவர்கள் என்ன சொன்னாலும்- ஏன்- வெள்ளைக் காகம் ஒன்று பறந்தது என்று சொன்னாலும், ஆம்- பறந்திருக்கலாம்- இரண்டு காகங்கள் கூடப் பறந்திருக்கும் என்று கூறி அவர்களின் உள்ளத்திற்கு மாறுபடாமல் சிலர் நடந்து கொள்வர். பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளோடு வாளாவாயினும் கொஞ்சுவர்- அவர்கள் என்ன சொன்னாலும், ஆம் ஐயா, (Yes Sir- ஆங்கிலம்)- (Oui Monsieur- பிரெஞ்சு) என்று 'ஆமாம் சாமி'களாகத்