பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 43

மனைவி கணவனின் பின் செல்வதும் இயற்கை. (பணக்காரப் பெண் வீட்டில் வாழ்க்கைப் பட்டுவிட்ட மாப்பிள்ளை வேண்டுமானால் பெண்ணுக்குப் பின் சென்றாலும் செல்லலாம்).

அம்பிகாபதி கோவை என்னும் நூலிலே ஆணும் பெண்ணும் முன்பின் செல்லல் ஒரு வேடிக்கையாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. ஒரு பாலை நிலச் சுரத்தைக் கடக்கும் போது, தலைவன் பின்னே தலைவி சென்றாளாம். ஆனால் முன் செல்வதை நிறுத்தி, தலைவியின் இடை அழகைக் கண்டது போலவே நடையழகையும் காண வேண்டும் என தலைவியின் பின் சென்றானாம். தலைவியோ, தலைவனுக்கு முன் செல்ல நாணிப் பின் சென்றாளாம்- ஒருவர்க் கொருவர் பின்னால்பின்னால் சென்று கொண்டிருந்தால் நிலைமை என்னாவது?

இந்த முறையினால், புதுச்சேரிக்குத் தெற்கேயுள்ள கடலூருக்குச் செல்லப் புறப்பட்டவர்கள், கடலூருக்குச் செல்லாமல், புதுச்சேரிக்கு வடக்கேயுள்ள மரக்காணத்தைச் சென்றடைவர். இவர்கள் கடலூர் செல்ல வேண்டு மெனில், மரக்காணம் பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் பின் ஒருவர் சென்றால்தான் கடலூரை அடைவர். இது ஒருவகை நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. இனி அம்பிகாபதி கோவைப் பாடலைக் காணலாம்:

முன்செல்ல நாணும் முகிழ்நகை வல்லி முருகனிவன் - பின்செல்ல எண்ணும் பிடிகடை காண. (179) என்பது பாடல் பகுதி. முகிழ் நகைவல்லி = முல்லை மொக்குப் போன்ற பற்களையுடைய தலைவி. முருகனிவன் = முருகனைப் போன்ற தலைவன்.

சிலர் முன்னும் பின்னுமாகச் செல்லாமல் இணை யாகக் கைகோத்துக் கொண்டு செல்வர். (ஒருவர் இன்னொருவரை விட்டு ஒடிவிடாமல் இருப்பதற்காகக்