பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 45

(அகங்கை) என்றால் உள்ளங்கை. கையை மடித்து முழங்கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு, அகலமாக உள்ள உள்ளங்கையை விரித்து வைத்துக் கொண்டு, அந்த உள்ளங்கையின் பரப்பில் தலையை வைத்துக் கொண்டு தூங்கினர் என்னும் பொருளில் அங்கை அணை' என்றுகூறியிருப்பதில் உள்ள நயம் சுவைக்கத் தக்கது.

'தயரதன் மோட்சப் படலம்'

உரையாமையும் காணாமையும்

துன்பச் செய்தியைச் சொல்ல மனம் வராமல் பேசா திருத்தலும், துன்பச் சூழ்நிலையைக் காணப் பொறாமல் அப்பால் நகர்தலும் உலகியற்கை. இராமன் திரும்ப வில்லை என்பதைத் தயரதனிடம் சொல்ல மனம் வராமல் வசிட்டன் பேசாதிருந்தானாம்; பின்னர்த் தயரதன் நிலைமையை அறிந்ததும் சோர்ந்து கிடைப்பதைப் பார்க்க மனமின்றி அங்கிருந்து அகன்றானாம். பாடல்:

இல்லையென் றுரைக்க லாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்;
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும் அரசன் சோர்ந்தான்; துயர்உறு முனிவன் நானில்
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்குகின்றகலப் போனான் (11)

உயிர் வரல்

மக்கள் ஒரு துன்பத்தால் வருந்திக்கொண்டிருக்கையில் அத்துன்பம் நீங்கியதும், அப்பா இப்பொழுதுதான் உயிர் வந்தது' என்று கூறுவது உலகியல். சுமந்திரனுடன் சென்று ஊர் மக்கள் காட்டில் உறங்கிக் கொண்டிருக்கை யில், இராமன் வர மறுத்ததால் சுமந்திரன் அயோத்தி நோக்கித் தேரை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டான். விழித்துப் பார்த்த மக்கள், நகர் நோக்கிச் சென்றதன் அடையாளமாகிய தேர்ச் சுவடைக் கண்டு, இராமன்