பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 () சுந்தர சண்முகனார்

நேரில் கேட்காமல் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது ஒருவகை உலகியல். இவ்வாறே, குகன், காட்டிற்கு வந்தது எதற்காக என்று இராமனை வினவாமல், தம்பி இலக்குமணனை வினவி அவன் கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பாடல்:

திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையுள் எய்தி இருகண் நீர் அருவி சோரக் குகனும் ஆண் டிருந்தான்.

(20)

பள்ளி படைப் படலம்

ஒரு பெண், தன் தாய் வீட்டிலிருந்து வந்த ஒருவரை நோக்கி, என் பெற்றோர், உடன் பிறந்தவர் எல்லாரும் குறைவின்றி நலமாயுள்ளனரா என்று வினவுவதுண்டு. கேகய நாட்டிலிருந்து பரதன் வந்து தன் தாயாகிய கைகேயியை வணங்கியதும் அவள் அவ்வாறே வினவினாள். பாடல்:

வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆரத் தழுவினள், தீது இலர்
எந்தை, என்னையர், எங்கையர் என்றனள் அந்தமில் குணத்தானும் அது ஆம் என்றான்

(42)

எந்தை - என் தந்தை; என்னையர் - என் அண்ணன் மார்; எங்கையர் = என் தங்கைமார்.

செவி கூடின

பரதன் கைகேயியை இரு கைகளையும் குவித்து வனங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவள், இராமன் காடு சென்றதையும், தயரதன் மேல் வீடு (மோட்சம்) அடைந்ததையும் கூற, அச் சொல்லைக் கேட்டதும், பரதனின் இரு கைகளும் இரு காதுகளைப்