பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 சுந்தர சண்முகனார்

எனவே, தயரதன் இராமனுக்குப் பட்டம் என்று கூறிய பின் அதை மாற்ற முடியாது. இவர்களது குலத்து உரிமை மயில் முறைக் குலத்ததாகும். மனுவின் காலத்திலிருந்து மாறவில்லை. நீ உன் இழி மதியால் இவ்வாறு கூறலாமா? என்று கடிந்துரைக்கிறாள்:

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர் உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறைக் குலத்து உரிமையை, மனுமுதல் மரபை
செயிர் உறப் புலைச் சிந்தையால் என்சொனாய் தீயோய்

(72).

ஞாயிறு குலத்து வந்த மன்னன் சிபி புறாவிற்காக உடலை அரிந்து கொடுத்தமை முதலான செய்திகளை, இங்கே ஞாயிறு குலத்தவரின் சீரிய பண்புடைமையாகக் கொள்ளலாம். மயில் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகள் பொரிக்கினும் முதலில் பொரித்த குஞ்சுக்கே தோகை வளரும். எனவே, இவர்களிலும், மயில் முறை போலவே, முதலில் பிறந்தவனுக்கே பட்டம் அளிப்பது முறை என்றாள் கைகேயி மற்றும் இந்தக் கருத்து கச்சியப்ப முனிவரின் தணிகைப் புராணத்திலும் சொல்லப் பட்டுள்ளது (களவு-244):

பலாவம் பொழிலின் ஒருதாய் உயிர்த்த பலமயிற்கும் கலாவம் புனைந்த களிமயில் மூத்தது

என்பது பாடல் பகுதி. கலாவம் = தோகை.

கைகேயி சூழ்வினைப் படலம்

கங்கை-கன்னி

புதிதாய் முடிசூடிக் கொள்பவர்களும், அறுபதாம் அகவைத் திருமணம் (மணி விழா) செய்து கொள்பவரும் இன்ன பிறரும், பல இடங்களிலிருந்து நீர் கொண்டு வந்து முழுக்காடுவது மரபு. இங்கே இராமனுக்கு முடிசூட்டின