பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 65

உண்பது நாழி- உடுப்பவை இரண்டே- என்று கூறுகிறார்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும்...... உண்பது நாழி உடுப்பவை இரண்டே

(189)

என்பது பாடல் பகுதி. நக்கீரர் பொதுமை இன்றி என்கிறார்; கம்பர் பொது' என்கிறார். கம்பர் தனி அன்று' என்கிறார்; நக்கீரர் ஒருமையோர்' என்கிறார்.

உலகம் பலருக்கும் உரியதன்றி ஒருவர்க்கே உரியதாம் கருத்தை நக்கீரரும் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பினும் அவருக்கும் உண்பது நாழி உடுப்பன இரண்டே என்கிறார். நக்கீரர் கருத்துக்குக் கம்பர் கருத்து மாறானது போல் மேலோடு பார்க்கும் போது தோ ன்றுகிறதே தவிர, உண்மையில் வேறுபாடன்று. 'தனி அன்று பொது' எனக் கம்பர் கூறியதன் கருத்து, இராமன் அனைவருக்கும் உரிமை தந்து அனைவரையும் அனணத்துக் கொண்டு பொதுவான நடு நிலைமையுடன் அரசாள்வான்- என்பதாகும்.

நகர் நீங்கு படலம்

மூட்டாத தீ

இந்த உலகம் அழியும் கடைசிக் காலத்து, கடலுக்கு உள்ளே உள்ள 'வடவை முகத்தீ' என்னும் நெருப்பு, யாரும் மூட்டாமலேயே தானே எழுந்து உலகத்தை எரித்து அழிக்குமாம். அது யாரும் மூட்டாத தீயாகும். இராமனுக்குக் காடு என்பதை அறிந்ததும், இலக்குமணன் மூட்டாத தீயைப் போல் கொதித்து எழுந்தானாம். வடவை முக நெருப்புக்கு மூட்டாத தீ எனப் பெயர் தந்திருப்பது சிறப்பாயுள்ளது. பாடல்: அ. ஆ.-5