பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 - சுந்தர சண்முகனார்

என்றால், பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயராக அல்லவா இருக்க வேண்டும்? வடமொழிப் பெயர்களாக உள்ளனவே!- என்ற வினா எழலாம். வடமொழியில் வடமொழியாளர்கள் எழுதிய ஒரு நெடுங்கதை வடமொழிப் பெயர்களைக் கொண்டுதான் இருக்கும் என்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? இந்தக் கருத்து முற்ற முடிந்ததன்று. இன்னும் ஆய்தற்கு உரியது.

சுமந்திரன் மீட்சிப் படலம்

கல்வி மாட்சி

மாட்டு வண்டி, குதிரை வண்டி, மிதிவண்டி, சிற்றுந்து- பேருந்து- சரக்குந்து, புகை வண்டி, கப்பல், வான ஊர்தி முதலியவற்றை ஒட்டுவதற்கு, அது அதற்கு உரிய முறையில் சிறிய அளவிலோ- பெரிய அளவிலோ முன்கூட்டிக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முற்பயிற்சி இல்லாமல் எதையும் திறம்பட ஒட்ட முடியாது. தேர் ஒட்டுவதற்கும் நல்ல பயிற்சி வேண்டும். போரில் வெற்றி பெறத் தேரோட்டி மிகவும் வல்லவனாய் இருத்தல் வேண்டும். பார்த்தன் என்னும் அர்ச்சுனனுக்குக் கண்ணன் திறமையாகத் தேரோட்டியதால்தான் அர்ச்சுனன் வெற்றி பெற மு டிந்தது. பார்த்தனுக்குச் சாரதியாக (தேரேரட்டியாக) கண்ணன் இருந்ததால் பார்த்தசாரதி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். எனவே, தேர் ஒட்டுவதற்கு எனத் தனிப் பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியும் ஒரு கல்வியாகும். சுமந்திரன் இந்தக் கல்வியைச் சிறப்பாகப் பெற்றவனாம்.

நகர் மக்களுடன் இராமனை அழைக்கப் போன சுமந்திரன், இராமன் வரமறுத்ததால், தேரை அயோத்தி நோக்கி ஒட்டினான். அப்போது கானகத்தில் நகர மக்கள்