பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 சுந்தர சண்முகனார்

வெய்யோன்= ஞாயிறு. மக்கள் இறப்பதும் பிறப்பதும் உண்டே தவிர, ஞாயிறு பிறப்பதும் இறப்பதும் இல்லை. யாதலின் பிறவா வெய்யோன் என்றார் கம்பர்.

ஞாயிறு தோன்றுவதோ மறைவதோ இல்லை. பூவுலகு (பூமி) தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிற்றையும் சுற்றுவதால், ஞாயிறு தோன்றுவது போலவும் மறைவது போலவும் இருக்கிறது என்பது இந்தக் காலத்தில் அறிந்த உண்மை. கம்பருக்கு இது தெரியுமோ தெரியாதோ- பிறவா வெய்யோன் என அவர் கூறியிருப்பது இந்தக் காலத்திற்குப் பொருத்தமாயுள்ளது.

தேவர் ஊன்

குகன் தன் இடத்திலேயே நிலையாய்த் தங்கியிருக்கும் படி இராமனை வேண்டிக் கூறுகிறான்: இங்கே தேனும் தினையும் உண்ண உள்ளன. தேவரும் உட்கொள்வதற்கு உரிய ஊன் உள்ளது. துணைக்கு நாய் போல் ஊழியம் செய்யும் எங்கள் உயிர்கள் உள்ளன- என்று கூறினான். பாடல் பகுதி:

தேன் உள; தினை உண்டால்; தேவரும் நுகர்தற்காம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள..

.... (29).

'நாயேம் உயிர் உள' என்பதில் உயிரையும் கொடுப்போம் உன்னும் கருத்து உள்ளது. ஆடு மாடு களை வெட்டி வேள்வித் தீயில் இட்ட இறைச்சியைத் தேவர்கள் தின்பார்கள் என்னும் செய்தி இதில் இலை மறை காயாய் உள்ளது.

வனம்புகு படலம்

முக்கூடல்

காட்டில் ஓரிடத்தில் இராமனை வரவேற்ற, பரத்துவாச முனிவர், அங்கேயே தம்முடன் இருந்துவிடும்