பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 79.

இது 'இயற்கையின் தேர்வு' (Nautral Selection) எனப் படும்.

''பள்ளி படைப் படலம்</center>

கிளியும் அன்னமும்

பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்தான். அயோத்தி பொலிவற்றுக் கிடக்கிறது. கிளிகள் ஓதவில்லை யாம்; காதலியர் காதலர்க்குத் தூது அனுப்பிய அன்னங்கள் போய் ஒன்றும் சொல்லவில்லையாம்.

ஒது கின்றில கிள்ளையும் ஓதிமம்
தூது சென்றன சொல்லல...

(23)

என்பது பாடல் பகுதி. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை' என்பர். கிளி பிறர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்குமாம்; அந்தப் பேச்சை அப்படியே திருப்பிக் கூறுமாம். செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி நூலின் கடை திறப்பு என்னும் பகுதியில் இது தொடர்பான சுவையான பாடல் ஒன்றுள்ளது.

வீட்டில் இரவில் தலைவனும் தலைவியும் கலவி மயக்கத்திலே கொஞ்சிய பேச்சை, மறுநாள் பகலில், வேறு வீட்டுப் பெண்கள் வந்திருந்தபோது, அவர்கள் கேட்கும் படி அப்படியே கிளி சொல்லியதாம். நாணம் கொண்ட தலைவி கிளியின் வாயைப் பொத்தினாளாம்:

கேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர் மணிப்பொற் கபாடம் திறமினோ

(47)

என்பது கலிங்கத்துப் பரணி பாடல். சிவப்பிரகாச அடிகளார் அருளிய பிரபுலிங்க லீலை என்னும் நூலிலும் கிளியின் பேச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. உமாதேவியின் கைகளில் நீல மலரும் கிளியும் உள்ளனவாம். சிவன் தேவிக்குக் கூறிய மறைமுடியின் (வேத முடிபின்):