பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 88

மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் (14)

என்பது பாடல் பகுதி. தயரதன் தன் உயிர்க்கு உறுவது செய்தல் என்பது தவம் செய்தலே. இந்தச் செய்தி, ஒரு திருக்குறளுக்கு நல்ல எடுத்துக் காட் டாய் உள்ளது.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு (266)

என்பதுதான் அந்தக் குறள். இங்ங்னமாக, தான் முடி துறக்கப் போவதை, தவம் செய்யப் போவதாகத் தயரதன் அறிவித்துள்ளான். மூப்பு வீடு உலகப் பற்றிலிருந்து விடுபட (வீடு பெற) வேண்டும் என மாந்தர்க்கு முதுமை அறிவிக்கின்றதாம். இதனை, விரும்பிய முப்பு எனும் வீடு கண்ட யான் (15) என்னும் பகுதி அறிவிக்கின்றது.

ஐந்து தேர்

கைகேயி கையில் கோல் (சவுக்கு-சாட்டி) கொண்டு குதிரைகளை அதட்டித் தேரைச் செலுத்தியுதவ, சம்பராசுரனுடைய பத்துத் தேர்களை வென்ற யான், மனம் என்னும் பேய் ஏறிச் செலுத்தும் மெய்- வாய்- கண்-மூக்கு- செவி என்னும் ஐம்பொறிகளாகிய- ஐந்து தேர்களை வெல்லுதல் எனக்கு அரிது அன்று- எளியதே எனத் தயரதன் கூறினான்:

பஞ்சி மென் தளிர் அடிப் பாவை கோல் கொள வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு எஞ்சலில் மனமெனும் இழுதை ஏறிய அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? (18).