பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 - சுந்தர சண்முகனார்

பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திருமகள் மணவினை தெரியக் கண்டயான் அருமகன் நிறை குணத்து அவனிமாது எனும் ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்

(28)

என்பது பாடல். இந்தக் கருத்து வெளியீடு புதுமையாய்ச் சுவை பயக்கின்றதன்றோ?

உயிர்க்கெலாம் நல்லன்

இராமனுக்கு முடி சூட்டுவதற்கு உடன்பட்டு வசிட்டன் பேசும் போது பின்வருமாறு இராமனைப்பற்றி ஒரு கருத்து கூறுகிறான். மன்னா, இராமன் உன் உயிர்க்கு மட்டும் நல்லது செய்பவன் என்று கூறுதல் தக்கதன்று; உன் உயிர்க்குப் போலவே உலகத்து உயிர்க் கெல்லாம் நன்மை செய்பவன் இராமன்:

தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த உன் உயிர்க்கு என, நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய்

(37)

இங்கே, தம் மக்களின் அறிவுடைமை, தம்மைக் காட்டிலும் (அல்லது தம்மைப் போலவே) உலகத்து உயிர்கட்கு எல்லாம் இனிமையாய்த் தோன்றும்- என்னும் கருத்துடைய

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)

என்னும் திருக்குறட் பாடல் ஒப்புநோக்கி மகிழ்தற்கு உரியது.

அகமும் முகமும்

இராமனுக்கு முடிசூட்டலாம் என்று வசிட்டன் அறிவித்தபின், அமைச்சர்கள் அனைவரும் வாயால் ஒன்றும் சொல்லலர். ஆனால் அவர்களின் முகமாகிய ஒலையில், இராமனுக்கு முடிசூட்டலாம் என்பது எழுதப்