பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 99

இந்தப் பாடலில் மற்றும் ஒரு புதுமை உள்ளது: கைகேயி தூய இனிய மொழி பேசக் கூடியவள்; இளைய மான் போன்றவள்; அத்தகையவள் அருள் துறந்து கடுமொழி பேசியதற்குக் காரணம், அரக்கர்கள் செய்த தீவினையும் மற்றவர்கள் செய்த நல்வினையுமேயாகும்என்பது தான் அந்தப் புதுமை!

கைகேயி சூழ்வினைப் படலம்

பேயும் தரும்

தயரதன் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டா எனக் கைகேயியிடம் கெஞ்சுகிறான். தன்னிடம் ஒருவர் ஒர் உதவி கேட்டு வந்தால் பேயும் தாய்போல அவ்வுதவியைச் செய்யும். எனவே, கைகேயீ! நீ இந்த உதவியைச் செய்தால் எந்தப் பிழையும் வராது என்று கெஞ்சுகிறான்:

தாய்தந் தென்ன தன்னை இரந்தால் தழல் வெங் கண்
பேய்தங் தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ

(33)

நா அம்பு

தயரதன் கைகேயியை நொந்து திட்டுகிறான். நீ (கைகேயி) உன் நாக்காகிய அம்பால் என் உயிரை உண்டுவிட்டாய். இனி உலகம் பெண் பாவம்' என்றும் பாராமல் உனது உயிரை மாய்க்கும்.

நா அம்பால் என் ஆருயிர் உண்டாய்; இனி ஞாலம் பாவம் பாராது இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்

(42)

இப்பாடலில் நாக்கு அம்பாக உருவகிக்கப்பட்டுள்ளது. ஒருவர் நாவால் கெடு சொல் கூற, அதனால் மற்றொருவர் துன்பம் உறுதலைக் கண்டவர், அவன் நாக்கு என்ன நாக்கோ, என்று பழிப்பதை உலகியலில் காணலாம். மற்றும் ஒரு நயம் இதில் உள்ளது. சுவைத்து உண்பது