பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

10

அருள்நெறி முழக்கம்


ஆண்டவனை நினைத்துத்தான் தீருவான். இதனை, நம் முன்னோர்கள் வாழ்வில் நன்கு காணலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தமிழன் எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தாலும் முடிவில் “சிவசிவா” என்ற சொல்லிற்கு வந்துதான் தீர்வான்

ஆங்கில நாட்டின் நாத்திகன் ஒருவன் துன்பம் தாங்காமல் முடிவில் ஓ கடவுளே! என்று கத்தினான். கடவுள் உண்டா இல்லையா என்று அங்கு நம்பிக்கைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் எழுந்தது. பிறர் தன்னைப் பரிகாசம் செய்யக்கூடாது என்பதற்காக நாளடைவில் அவன் தன்னுடைய பிரார்த்தனைக்குத் திருத்தம் செய்யத் தொடங்கினான். ஏ கடவுளே! நீ என்னைக் காப்பாற்று என்று கூறினான். அதிலும் அவன் வெளியுலகிற்கு அஞ்சினான். முடிவில் அந்த ஆங்கிலேயன் "ஓ கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் காப்பாற்றும்" என்று கூறி வழிபடத் தொடங்கினான்.

மறுப்பதின்மூலம் - வெறுப்பதின்மூலம் - உடைப்பு, எரித்தலின்மூலம் சிலர் ஆண்டவனை நினைந்து அவனது நாமத்தைக் கூறி வருகின்றார்கள். இவ்வாறாகத்தான் இன்றைய உலகில் கடவுள் தன்மைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தன்மான உணர்ச்சிதான் இன்று பலரைக் கடவுள் நம்பிக்கைக்குக் கொண்டுவர முடியாத நிலையில் வைத்திருக்கிறது.

“என்னடா இது! இருபத்தைந்து வருட காலமாக பத்திரிகையில் கடவுள் இல்லை என்று எழுதியும் மேடையில் பேசியும் வந்தோமே! இன்று கடவுள் நெறியில் சென்றால் - அருள்நெறியைப் பின்பற்றினால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்களே” என்று இன்று பல தன்மான இயக்கத் தோழர்கள் கருதுகின்றனர். சீர்திருத்தம் பேசிச் சிந்தனையைப் பறிகொடுத்து கருத்தை இழந்து நிற்கும் தோழர்கள் கருதுகின்றனர். அவர்கள் எண்ணிய எண்ணத்தைச் செயலில்